தமிழ்நாடு அரசின் சிறப்புக்குரிய திராவிட மாடல் பட்ஜெட்டை எந்நாளும் போற்றப்படும்: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ட்வீட்

சென்னை: தமிழ்நாடு அரசின் சிறப்புக்குரிய பட்ஜெட் எந்நாளும் போற்றப்படும் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு அரசின் 2023-24ம் நிதியாண்டிற்கான பொது பட்ஜெட் சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்யப்பட்டது. இந்நிலையில் இது குறித்து டிவிட்டரில் கருத்து தெரிவித்துள்ள அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்; சொன்னதை செய்வோம்-செய்வதையே சொல்வோம் எனும் கலைஞரின் சொல்படி, இல்லத்தரசிகளுக்கு மாதம் ரூ.1000 உரிமைத்தொகை-யை ரூ.7000 கோடி செலவில் அண்ணா பிறந்த நாள் முதல் வழங்கப்படும் என்று தமிழ்நாடு பட்ஜெட்டில் அறிவித்து அதை சாத்தியமாக்கிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி.

தமிழ் வளர்ச்சி -கல்வி- சுகாதாரம்-மகளிர்- ஆதிதிராவிடர் - முதியோர்- மாற்றுத்திறனாளி நலன், தொழில்-போக்குவரத்து - விளையாட்டு என அனைத்துத்துறை வளர்ச்சியும் ஏற்றமும்பெற திராவிட மாடல் பட்ஜெட்டை தந்துள்ள முதலமைச்சர், நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அவர்களுக்கு நன்றி. சென்னை Sportscity-நேரு உள்விளையாட்டு அரங்கப் புனரமைப்பு-மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு 30,000 கோடி கடன் இலக்கு-மகளிர் புத்தொழில் இயக்கம்-தொழிற்சாலை திறன் பள்ளி என என்னுடைய துறைகளுக்கு தமிழ்நாடு பெட்ஜெட்டில் பல்வேறு திட்டங்களைத் தந்த முதலமைச்சருக்கு நன்றி. கலைஞர் பெயரிலான நூற்றாண்டு நூலகம் மாற்று பன்னோக்கு மருத்துவமனை திறப்பு. தாளமுத்து-நடராசன் நினைவு மண்டபம்.

தமிழில் அண்ணல் அம்பேத்கர் நூல்கள். தமிழறிஞர்களுக்கு கட்டணமில்லாப் பயணம் என முதலமைச்சர் தலைமையிலான திமுக அரசின் சிறப்புக் குரியபட்ஜெட் எந்நாளும் போற்றப்படும், பேராசிரியர் அன்பழகனார் பள்ளி-பெருந்தலைவர் காமராசர் கல்லூரி மேம்பாட்டுத் திட்டங்கள்- குடிமைப்பணி தேர்வர்களுக்கு பயிற்சி உதவித்தொகை எனப் பார்த்துப் பார்த்து கல்விக்கான திட்டங்களைத் தந்துள்ள முதலமைச்சரின் திராவிட மாடல் பட்ஜெட்டை போற்றுவோம் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

Related Stories: