மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் 80 லட்சத்துக்கும் அதிகமான பெண்கள் பலன் அடைய வாய்ப்பு: அமைச்சர் கீதாஜீவன் பேட்டி

சென்னை: தமிழ்நாடு அரசின் 2023-24ம் நிதி ஆண்டுக்கான பொது பட்ஜெட்டை சட்டசபையில் இன்று நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்தார். இதை இ-பட்ஜெட் ஆக அவர் தாக்கல் செய்தார். அவர் தாக்கல் செய்யும் மூன்றாவது இ-பட்ஜெட் ஆகும்.

செப்டம்பர் 15-ல் குடும்ப தலைவிக்கு மாதம் ரூ.1000 வழங்கும் திட்டத்தை நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் பட்ஜெட்டில் அறிவித்தார்.உரிமை தொகை வழங்கும் திட்டத்தை அண்ணாவின் பிறந்தநாளான செப்டம்பர் 15ம் தேதி முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைப்பர் என்று தெரிவித்துள்ளனர். நாட்டிலேயே நேரடி மானியமாக அதிக நிதி வழங்கும் திட்டமாக மகளிர் உரிமைத்தொகை திட்டம் இருக்கும் என்று தெரிவித்துள்ளனர்.  

 

மகளிருக்கான ரூ.1,000 உதவித்தொகை அனைவருக்கும் மகிழ்ச்சி தரக்கூடியதாக உள்ளது.மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் 80 லட்சத்துக்கும் அதிகமான பெண்கள் பலன் அடைய வாய்ப்பு உள்ளது அமைச்சர் கீதாஜீவன் கூறியுள்ளார். ரூ. 1,000 உரிமைத் தொகை திட்டத்தில் அரசு ஊழியர்கள், வருமான வரி செலுத்தும் மகளிர் பலன்பெற முடியாது.

இந்த நிதியாண்டில் 6 மாதமே உள்ளதால் திட்டத்துக்கு 7 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. உரிமைத் தொகை ரூ. 1,000 மகளிரின் வங்கி கணக்கில் நேரடியாக செலுத்தப்படும். உரிமைத்தொகை குறித்த வழிகாட்டு நெறிமுறைகள் விரைவில் வெளியிடப்படும். செப்டம்பர் முதல் மார்ச் வரை ரூ.7,000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மகளிருக்கு பொருளாதார சுதந்திரத்தை இத்திட்டங்கள் ஏற்படுத்தித் தரும் என்று அமைச்சர் கீதாஜீவன் கூறியுள்ளார்.

Related Stories: