தமிழ்நாடு முழுவதும் உள்ள பல்கலைக்கழகங்களில் ஒரே மாதிரியான நிர்வாகம் அமைக்க குழு: உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி பேட்டி

சென்னை: சென்னை தலைமைச் செயலகத்தில் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தலைமையில், அனைத்து பல்கலைக்கழக துணைவேந்தர்கள், பதிவாளர்களுடனான ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது.  இதில், உயர்கல்வித்துறை முதன்மைச்செயலாளர் கார்த்திகேயன், மாநில உயர்கல்வி மன்ற துணை தலைவர் ராமசாமி மற்றும் துறை சார்ந்த அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில், பல்கலைக்கழக தேர்வுகளில் வினாத்தாள் தயாரித்தல் மற்றும் விடைத்தாள் திருத்துவதில் ஏற்படும் நடைமுறை சிக்கல்களை களைதல் குறித்தும், பதிவாளர், இயக்குனர் போன்ற முக்கிய பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளது குறித்தும், சட்டப்பேரவையில் வெளியிடப்பட இருக்கூடிய புதிய அறிவிப்புகள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டன.

இதன் பின்னர், நிருபர்களிடம் அமைச்சர் பொன்முடி பேசியதாவது: தமிழகத்தில் அனைத்து பல்கலைக்கழகம் ஒவ்வொன்றிலும், ஒவ்வொரு மாதிரியான நடைமுறைகள் உள்ளன. அவற்றை மாற்றி அனைத்து பல்கலைகழகங்களிலும் ஒரே நடைமுறை கொண்டுவர திட்டமிட்டுள்ளோம். அதன் முதல்படியாக, பணி நியமனங்கள், தேர்வுக்கட்டணம், பதிவாளர்கள், பேராசிரியர்கள், ஊழியர்களுக்கான ஊதியம் என ஒரே மாதிரி நிர்வாகம் உருவாக்கப்படும். அதன் அடிப்படையில் விரைவில் ஒரு குழு அமைக்கப்பட்டு, அந்த குழு அளிக்கும் கோரிக்கைகளை ஏற்று நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் பழைய தேர்வு கட்டணமே மாணவர்களிடம் வசூலிக்கப்படும். போலி டாக்டர் பட்டம் சர்ச்சை, இனி எந்த பல்கலைக்கழகத்திலும் நடைபெறாது என உறுதியளிக்கிறேன். வரும் காலங்களில் பல்கலைக்கழக நிகழ்ச்சிகளை நடத்தினாலும், அதுதொடர்பான அனுமதியை உயர்கல்வி துறையின் செயலாளரிடம் பெற்ற பின்னரே நடத்த வேண்டும். அதேபோல, தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி துணை வேந்தர்களை, மாநில அரசே நியமிக்கும் மசோதா மட்டுமல்லாது, ஆன்லைன் சூதாட்ட மசோதாவையே திருப்பி அனுப்பி உள்ளார்.

Related Stories: