அமலாக்கத்துறை தொடர்ந்த 96% வழக்கில் தண்டனை: புள்ளிவிவரம் வெளியீடு

புதுடெல்லி: கடந்த 2002ம் ஆண்டு இயற்றப்பட்ட பணமோசடி தடுப்பு சட்டம், 2005ம் ஆண்டில் கடுமையாக்கப்பட்டது. இதுபோன்ற பணமோசடி விவகாரங்களை விசாரிக்க, குற்றவாளிகளை கைது செய்ய, அவர்களின் சொத்துகளை பறிமுதல் செய்ய, குற்றவாளிகளை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த அமலாக்கத்துறைக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.  இந்நிலையில்,  பணமோசடி தடுப்பு சட்டம், அந்திய செலாவணி மேலாண்மை சட்டம், தப்பியோடிய பொருளாதார குற்றவாளிகள் சட்டம் ஆகிய 3 சட்டங்களின்கீழ், 2023 ஜனவரி 31 வரையிலான புதுப்பிக்கப்பட்ட தரவுகளை அமலாக்கத்துறை இயக்குநரகம் வௌியிட்டுள்ளது.

அதன்படி, மொத்தம் பதிவு செய்யப்பட்ட வழக்குகளில் முன்னாள், இந்நாள் எம்.பி, எம்.எல்.ஏக்கள், எம்.எல்.சிகள் மீது பதிவானவை 2.98 சதவீத வழக்குகள் மட்டுமே. பணமோசடி தடுப்பு சட்டத்தின்கீழ், 1,142 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 513 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் 25 வழக்குகளில் விசாரணை முடிவடைந்து 24 வழக்குகளுக்கு தண்டனையும், ஒரு வழக்கிற்கு குற்றம்சாட்டப்பட்டவர் நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டுள்ளார். பணமோசடி தடுப்பு சட்டத்தின்கீழ் தண்டனை பெற்ற குற்றவாளிகள் எண்ணிக்கை 45. மொத்தமாக 96 சதவீத வழக்குகளில் தண்டனை பெற்று தரப்பட்டுள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: