குழந்தையையும் கிள்ளி விட்டு தொட்டிலை ஆட்டிவிடும் செயலில் பாஜக ஈடுபட்டு வருகிறது: ஜெயக்குமார் கடும் கண்டனம்..!

சென்னை: குழந்தையையும் கிள்ளி விட்டு தொட்டிலை ஆட்டிவிடும் செயலில் பாஜக ஈடுபட்டு வருகிறது என ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். எடப்பாடி பழனிசாமியின் உருவப்படத்தை எரித்து போராட்டத்தில் ஈடுபட்ட பாஜ நிர்வாகி மாவட்ட தலைமையால் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டார். மாவட்ட தலைவர் வெங்கடேசன் சென்னகேசவன், தினேஷ் ரோடியின் பொறுப்பை பறித்து நேற்றிரவு 9 மணிக்கு அறிக்கை வெளியிட்ட நிலையில், இன்று அதிகாலை 1.30 மணிக்கு மாநில பொதுச் செயலாளர் பொன்.பாலகணபதி, அந்த அறிவிப்பை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளார்.

இதன்மூலம் தினேஷ் ரோடி, தொடர்ந்து அதே பொறுப்பில் நீடிக்கப்படுகிறார். இரவு 9 மணிக்கு பொறுப்பு பறிக்கப்பட்ட நிலையில், 4 மணி நேரத்தில் மீண்டும் அதே பொறுப்பு வழங்கப்பட்டது கட்சியினரிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது அதிமுக எடப்பாடி அணியினரிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. இரவு 9 மணிக்கு பொறுப்பு பறிக்கப்பட்ட நிலையில், 4 மணி நேரத்தில் மீண்டும் அதே பொறுப்பு வழங்கப்பட்டது கட்சியினரிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது அதிமுக எடப்பாடி அணியினரிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

இந்நிலையில் இது குறித்து சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்; ஈபிஎஸ் உருவப்பொம்மையை எரித்ததால் நீக்கப்பட்டவரை மீண்டும் கட்சியில் சேர்ப்பதா?. குழந்தையையும் கிள்ளி விட்டு தொட்டிலை ஆட்டிவிடும் செயலில் பாஜக ஈடுபட்டு வருகிறத. பாஜகவின் செயல் எரிகிற தீயில் எண்ணெய் ஊற்றுவது போலாகிறது. அதிமுகவை சீண்டினால் எதிர்வினை அதிகமாக இருக்கும்.

பாஜகவினரை போல் அதிமுகவில் கிளர்ச்சி அடைந்திருந்தால் என்ன ஆகியிருக்கும். என கூறினார். தொடர்ந்து பேசிய அவர்; நாடாளுமன்றத் தேர்தலுக்குத் தயாராகிக் கொண்டிருக்கிறோம். ஈரோடு கிழக்கு தேர்தல், நாடாளுமன்றத் தேர்தலில் எதிரொலிக்காது எனவும் கூறினார்.

Related Stories: