இன்ஸ்டாகிராம் தோழியிடம் பணமோசடி செய்தவர் கைது

தண்டையார்பேட்டை: இன்ஸ்டாகிராம் தோழியிடம் பணமோசடி செய்த பெண்ணை போலீசார் கைது செய்தனர். ராயபுரம் அப்பயர் தெருவைச் சேர்ந்தவர் குமரன். இவருடைய மகள் ரேகா (22). பெயர் மாற்றப்பட்டுள்ளது. இவர் தனியார் நிறுவனத்தில் கணக்காளராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு கடந்த மாதம் 17ம் தேதி இன்ஸ்டாகிராம் மூலம் பழவந்தாங்கல் நேரு காலனி 18வது‌ தெருவைச் சேர்ந்த உமாமகேஷ் (24) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது.

உமா மகேஷ்  சிசிடிவி இன்ஸ்டால் செய்யும் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில்  உமாமகேஷ்க்கு பணம் தேவைப்படுவதாக ரேகாவிடம் கேட்டுள்ளார். பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக ஒரு லட்சத்து 30 ஆயிரம் பணத்தை ஜிபே, போன் பே மூலம்  உமாமகேஷ்க்கு ரேகா அனுப்பி வைத்துள்ளார். இதனையடுத்து பணத்தை திருப்பிக் கேட்டால் கொடுக்காமல் ரேகாவை, உமா  உமாமகேஷ் ஏமாற்றி வந்துள்ளார்.

இதுகுறித்து ராயபுரம் குற்றப்பிரிவு போலீசில் கடந்த 6ம் தேதி ரேகா புகார் அளித்தார். மேலும் போலீசார் கூறியதுபோல, நேற்று முன்தினம் இரவு உமாமகேஷை ராயபுரத்திற்கு வரவைத்து அவரைப் பிடித்து போலீசில் ரேகா ஒப்படைத்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தியதில்  உமாமகேஷ்  பணத்தை வாங்கியது  உண்மை என்று தெரியவந்தது. அதன்பேரில்  உமாமகேைஷ ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, புழல்சிறையில் அடைத்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: