உத்தரகாண்ட் சட்டப்பேரவையில் அமளி 15 காங்கிரஸ் எம்எல்ஏக்கள் சஸ்பெண்ட்

கெய்ர்சேன்: உத்தரகாண்ட் சட்டசபையில் இருந்து 15 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள்  ஒரு நாள் இடைநீக்கம் செய்யப்பட்டனர். உத்தரகாண்ட் சட்டப்பேரவையில் நேற்று உதம்சிங்நகர் எஸ்பிக்கு எதிராக சிறப்பு உரிமை மீறல் தீர்மானத்தை காங்கிரஸ் எம்எல்ஏ ஆதேஷ் சவுகான் கொண்டு வந்தார். இது நீதித்துறை சம்பந்தப்பட்டது என்று கூறி சபாநாயகர் ரிது கந்தூரி நிராகரித்தார். ஆத்திரம் அடைந்த காங்.எம்எல்ஏக்கள் சபாநாயகர் இருக்கையை முற்றுகையிட்டு கோஷம் எழுப்பினர். அப்போது பேரவையின் பொறுப்பாளர் ஹேம் சந்திர பந்தைத் தள்ளிவிட்டு, அவரது இருக்கையை விட்டு வெளியேறும்படி வற்புறுத்தியதால் அவையில் அமளி ஏற்பட்டது.

மேலும் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் ஆதேஷ் சவுகான், புர்கான் அகமது ஆகியோர் சட்டசபை செயலாளரின் மேஜை மீது ஏறி, சட்டசபை விதி புத்தகத்தை கிழித்து அரசுக்கு எதிராக கோஷம் எழுப்பினர். காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் அமைதியாகி தங்கள் இருக்கைகளுக்குச் செல்லுமாறு சபாநாயகர் பலமுறை வேண்டுகோள் விடுத்தும் அவை கேட்கப்படாமல் போனதால், அமளியில் ஈடுபட்ட அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களையும் ஒரு நாள் சஸ்பெண்ட் செய்து பிற்பகல் 3 மணி வரை அவையை ஒத்திவைத்தார். 5 காங் எம்.எல்.ஏக்கள்,  சபாநாயகரால் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

Related Stories: