கவிதாவின் முன்னாள் ஆடிட்டருக்கு சம்மன்

புதுடெல்லி: டெல்லி கலால் கொள்கை விவகாரத்தில் தெலங்கானா முதல்வர் மகள் கவிதாவின் முன்னாள் ஆடிட்டருக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி உள்ளது. டெல்லி மதுபானக்கொள்கை விவகாரத்தில் தெலங்கானா முதல்வர் சந்திரசேகரராவ் மகள் கவிதாவிடம் அமலாக்கத்துறை விசாரணை நடத்தி முடித்துள்ளது. மீண்டும் அவரிடம் 16ம் தேதி விசாரணைக்கு வருமாறு உத்தரவிட்டுள்ளது.

இந்த வழக்கில் கவிதாவின் முன்னாள் ஆடிட்டர் புச்சிபாபு கொரண்டலாவை விசாரணைக்கு வருமாறு அழைத்துள்ளதாக அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது. இந்த வழக்கில் அவர் ஏற்கனவே சிபிஐயால் கைது செய்யப்பட்டு தற்போது ஜாமீனில் உள்ளார். அவரை நாளை விசாரணைக்கு ஆஜராகும்படி அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி உள்ளது.

Related Stories: