சபரிமலையில் நெரிசலை குறைக்க உடனடி முன்பதிவு ரத்து

திருவனந்தபுரம்: சபரிமலை ஐயப்பன் கோயிலில் கடந்த மண்டல, மகர விளக்கு சீசன் வரை ஆன்லைனிலும், உடனடி முன்பதிவு கவுண்டர்களிலும் தினமும் எத்தனை பேருக்கு வேண்டுமானாலும் முன்பதிவு செய்ய வசதி ஏற்படுத்தப்பட்டிருந்தது. கடந்த மண்டல, மகர விளக்கு சீசனில் கட்டுக்கடங்காமல் பக்தர்கள் குவிந்ததால் முன்பதிவு எண்ணிக்கையில் கட்டுப்பாடு விதிக்கப்பட்டது.

அதன்படி தினசரி ஆன்லைன் முன்பதிவு 80 ஆயிரமாக குறைக்கப்பட்டது. உடனடி முன்பதிவும் கட்டுப்படுத்தப்பட்டது. இந்தநிலையில் வரும் மண்டல சீசன் முதல் நெரிசலைக் கட்டுப்படுத்துவதற்காக உடனடி முன்பதிவு வசதியை ரத்து செய்ய தீர்மானிக்கப்பட்டு உள்ளது. அதன்படி தினசரி ஆன்லைன் முன்பதிவு 80 ஆயிரம் வரை என கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

 

The post சபரிமலையில் நெரிசலை குறைக்க உடனடி முன்பதிவு ரத்து appeared first on Dinakaran.

Related Stories: