நேபாள அதிபராக ராம் சந்திர பவ்டேல் பதவியேற்பு

காத்மண்டு: நேபாளம் நாட்டின் 3வது அதிபராக ராம் சந்திர பவுடேல் நேற்று பதவியேற்றுக் கொண்டார். நேபாள அதிபராக இருந்த பித்யா தேவி பண்டாரி பதவி காலம் நேற்றுடன் முடிவடைந்தது. இங்கு ஏற்கனவே அறிவித்தபடி, கடந்த வியாழக்கிழமை அதிபர் தேர்தல் நடந்தது. இதில் எதிர்க்கட்சி சார்பில் ராம் சந்திர பவ்டேல், ஆளும் கூட்டணி கட்சி சார்பில் சுபாஷ் நெம்பாங் போட்டியிட்டனர். இங்கு மொத்தமுள்ள 884 எம்பி, எம்எல்ஏக்களின் வாக்கு மதிப்பு 52,786 ஆக உள்ளது. இதில் பவ்டேல் 33,802 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். இதைத் தொடர்ந்து, நேற்று அவர் நேபாள நாட்டின் 3வது அதிபராக பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு பொறுப்பு தலைமை நீதிபதி ஹரி கிருஷ்ண கார்கி பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.

Related Stories: