அமெரிக்கா-தென்கொரியா கூட்டு ராணுவ பயிற்சி

சியோல்: அமெரிக்காவும், தென்கொரியாவும் இணைந்து நேற்று கூட்டாக ராணுவ பயிற்சியை தொடங்கின. உலக நாடுகள் தொடர்ந்து எதிர்த்தாலும் வடகொரியா யாருக்கும் அஞ்சாமல் ஏவுகணை சோதனைகளை தொடர்ந்து வருகின்றது. இதனால் கொரிய தீபகற்பத்தில் அவ்வப்போது பதற்றம் ஏற்பட்டு வருகின்றது. இந்நிலையில் அமெரிக்காவும்  தென்கொரியாவும் இணைந்து கூட்டு ராணுவ பயிற்சி நடத்துவதாக அறிவித்தன. இதற்கு வடகொரியா கடும் கண்டனம் தெரிவித்து இருந்தது. இரு நாடுகளும் இணைந்து போர் பயிற்சியில் ஈடுபட்டால் அதனை போருக்கான ஒத்திகையாக கருதி தக்க பதிலடி கொடுக்கப்படும் என்றும் வடகொரியா எச்சரித்தது. மேலும் அமெரிக்கா மற்றும் தென்கொரியாவை எச்சரிக்கும் வகையில்  நேற்று முன்தினம் நீர்மூழ்கி கப்பலில் இருந்து ஏவுகணை சோதனையை வடகொரியா நடத்தியுள்ளது. வடகொரியாவின் அச்சுறுத்தலுக்கு இடையே அமெரிக்கா - தென்கொரியா இணைந்து நேற்று கூட்டு ராணுவ பயிற்சியை தொடங்கின. இந்த பயிற்சி தொடர்ந்து 11 நாட்கள் நடைபெற உள்ளது.

Related Stories: