மதுபான விடுதிக்குள் 10 பேர் சுட்டுக் கொலை: மெக்சிகோவில் பயங்கரம்

மெக்சிகோ: மெக்சிகோவின் மத்திய மாகாணமான குவானாஜுவாடோவில் உள்ள மதுபான விடுதிக்குள் நேற்றிரவு ஆயுதமேந்திய கும்பல் நுழைந்து. அந்த கும்பல் மதுபானக் கடைக்குள் மது அருந்திக் கொண்டிருந்த வாடிக்கையாளர்கள் மற்றும் பணியாளர்களை நோக்கி சரமாரியாக சுட்டு தாக்குதல் நடத்தியது. இந்த சம்பவத்தில் 10 பேர் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் சரிந்தனர். மேலும் ஐவர் காயமடைந்தனர். தகவலறிந்த அரசுப் படையினர் சம்பவ இடத்திற்கு வந்து ஆயுதமேந்திய கும்பலை தேடினர். ஆனால் அவர்கள் அங்கிருந்து தப்பிவிட்டனர்.

மெக்சிகோவின் மிகவும் பிரபலமான சுற்றுலா தலமான குவானாஜுவாடோ நகரத்தை ஒட்டியுள்ள, சாண்டா ரோசா டி லிமா மற்றும் ஜலிஸ்கோ நியூவா ஜெனரேசியன் என்ற இரண்டு இடங்களில் போதைப்பொருள் கடத்தல் மற்றும் எரிபொருள் திருட்டு சம்பவங்கள் அடிக்கடி நடக்கின்றன. அதனால் அந்த கடத்தல் கும்பலை சேர்ந்தவர்கள் தான் துப்பாக்கி சூடு தாக்குதலை நடத்தியிருக்க வேண்டும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

Related Stories: