ஆந்திரா மாஜி முதல்வர் கிரண்குமார் ரெட்டி காங்.கில் இருந்து விலகல்: பாஜவில் இணைகிறார்

ஐதராபாத்: ஆந்திரா முன்னாள் முதல்வர் கிரண்குமார் ரெட்டி காங்கிரசில் இருந்து நேற்று விலகினார். அவர் விரைவில் பாஜவில் இணைகிறார்.ஆந்திராவில் கடந்த 2010 முதல் 2014ம் ஆண்டு வரை காங்கிரஸ் சார்பில் முதல்வராக இருந்தவர் கிரண்குமார் ரெட்டி. இவர், தெலங்கானா தனி மாநிலமாக பிரிக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து தனது பதவியை ராஜினாமா செய்தார். ஆனாலும், தொடர்ந்து காங்கிரசில் மூத்த தலைவராக இருந்து வந்தார்.

அவர் காங்கிரசில் இருந்து விலகி பாஜவில் சேர பேரம் பேசி வருவதாக கடந்த சில நாட்களாகவே செய்திகள் பரவின. இந்த நிலையில், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேக்கு  கிரண்குமார் ரெட்டி நேற்று இரவு கடிதம் ஒன்றை அனுப்பினார். அதில் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து விலகுவதாக தெரிவித்துள்ளார். இதையடுத்து அவர் விரைவில் பாஜவில் சேருவார் என்று அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்தன.

Related Stories: