என்.எல்.சி. விவகாரம் கூட்டணி கட்சி தலைவர்கள் முதல்வருடன் திடீர் சந்திப்பு

சென்னை: சென்னை தலைமை செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினை நேற்று திமுக கூட்டணி கட்சி தலைவர்கள் பாலக்கிருஷ்ணன் (மார்க்சிய கம்யூனிஸ்டு மாநில செயலாளர்), முத்தரசன் (இந்திய கம்யூனிஸ்டு மாநில செயலாளர்), திருமாவளவன் (விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர்), வேல்முருகன் (தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர்) உள்ளிட்டோர் நேரில் சந்தித்து பேசினர். அப்போது, நெய்வேலி என்.எல்.சி. சுரங்க பணிக்கு நிலம் கையகப்படுத்தும் விவகாரத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க அழுத்தம் கொடுக்க வலியுறுத்தியதாக கூறப்படுகிறது. இதன்பிறகு செய்தியாளர்களை சந்தித்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன், ‘‘நெய்வேலியில் உள்ள பதற்றமான சூழல் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் ஒன்றிய அரசுக்கு கடிதம் எழுதுவதாக தெரிவித்துள்ளார்’’ என்று கூறினார்.

Related Stories: