ரயில் விபத்துக்கு பொறுப்பேற்று அமைச்சர் ராஜினாமா செய்ய மறுப்பது அதிகார வெறியை காட்டுகிறது: செல்வப்பெருந்தகை பேட்டி

சென்னை: கக்கன் 117வது பிறந்த நாளை முன்னிட்டு, தமிழக காங்கிரஸ் சார்பில் சத்தியமூர்த்தி பவனில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அவரது படத்துக்கு தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப் பெருந்தகை மலர்தூவி மரியாதை செலுத்தினார். அவரை தொடர்ந்து, முன்னாள் தலைவர்கள் ஈவிகேஎஸ்.இளங்கோவன், தங்கபாலு, கே.எஸ்.அழகிரி, திருநாவுக்கரசர், கிருஷ்ணசாமி, துணைத் தலைவர்கள் சொர்ணா சேதுராமன், இமயா கக்கன், முன்னாள் எம்பி ராணி, பொதுச் செயலாளர்கள் ரங்கபாஷ்யம், தளபதி பாஸ்கர், மாவட்ட தலைவர் எம்.ஏ.முத்தழகன், எஸ்.சி.துறை தலைவர் ரஞ்சன் குமார், இளைஞர் காங்கிரஸ் முதன்மை பொதுச்செயலாளர் அஸ்வத்தாமன் மற்றும் நிர்வாகிகள் மயிலை தரணி, சூளை ராஜேந்திரன் உள்பட பலர் மரியாதை செலுத்தினர். அப்போது, பாஜவில் இருந்து விலகிய ஓய்வு பெற்ற நீதிபதி குணசேகரன் காங்கிரசில் கட்சியில் இணைந்தார்.

பின்னர், செல்வப்பெருந்தகை நிருபர்களிடம் கூறியதாவது: பாஜ ஆட்சிக்கு வந்த பிறகு கோரமண்டல் ரயில் விபத்து உள்ளிட்ட தொடர் விபத்துகள் நடந்து வருகிறது. இதற்கு பொருப்பேற்று ஏன், பாஜ அமைச்சர் ராஜினாமா செய்ய மறுக்கிறார். பிடிவாதமாக இருக்கிறார்கள். அதிகார வெறி என்பது இதன் மூலமாக தெரிகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

The post ரயில் விபத்துக்கு பொறுப்பேற்று அமைச்சர் ராஜினாமா செய்ய மறுப்பது அதிகார வெறியை காட்டுகிறது: செல்வப்பெருந்தகை பேட்டி appeared first on Dinakaran.

Related Stories: