குழந்தைகள் காப்பக திட்ட முறைகேடு: சிபிஐ விசாரணை தொடங்கியது

புதுடெல்லி: குழந்தைகள்  காப்பக திட்ட முறைகேடு தொடர்பான வழக்கில் சிபிஐ விசாரணை தொடங்கியுள்ளது. ராஜிவ் காந்தி தேசிய குழந்தைகள் பகல் காப்பக திட்டம்  கடந்த 2006ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இதன் செயல்பாடுகள் குறித்து ஆய்வு நடத்துவதற்கு அரசு இணை செயலாளர் தலைமையில் 3 பேர் கொண்ட கமிட்டியை டெல்லி உயர் நீதிமன்றம் அமைத்தது.

அப்போது  பல முறைகேடுகள் நடந்துள்ளது தெரிய வந்தது. எத்தனை குழந்தைகள் சேர்ந்து உள்ளனர் போன்ற அடிப்படை விவரங்களை சேகரிக்காமல்  நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. குறைவான குழந்தைகள் இருந்த காப்பகங்களுக்கு கூடுதல் நிதி ஒதுக்கி மோசடி நடைபெற்றுள்ளது என அந்த கமிட்டி குறிப்பிட்டுள்ளது. இதற்கிடையே,இந்த முறைகேடு தொடர்பான வழக்கில் சிபிஐ  விசாரணையை தொடங்கியுள்ளது.

Related Stories: