மது கொடுக்காத டாஸ்மாக் கடை மீது பெட்ரோல் குண்டு வீச்சு : போதை ஆசாமி வெறிச்செயல்

சென்னை: கடை மூடிய பிறகு மது கொடுக்காததால், டாஸ்மாக் கடை மீது பெட்ரோல் குண்டு வீசிய போதை ஆசாமியை போலீசார் கைது செய்தனர். சென்னை வளசரவாக்கம் ஆற்காடு சாலையில் அரசு மதுபானக் கடை செயல்பட்டு வருகிறது. நேற்று முன்தினம்  இரவு விற்பனை முடிந்த பிறகு கடையை ஊழியர்கள் மூடிவிட்டனர். அப்போது இருசக்கர வாகனத்தில் போதையில் வந்த நபர் ஒருவர் 100 ரூபாய் கொடுத்து ஒரு குவாட்டர் கேட்டுள்ளார். கடையை மூடி விட்டதால் மதுபானம் கொடுக்க முடியாது  கடை ஊழியர் ராஜேந்திரன்(43) என்பவர் தெரிவித்துள்ளார்.

இதனால், ஆத்திரமடைந்த அந்த போதை ஆசாமி, தனது பைக்கை நிறுத்தி, அதிலிருந்து பெட்ரோலை காலி மதுபாட்டிலில் பிடித்து தீப்பற்ற வைத்து கடையின் மீது வீசி எறிந்தார். அந்த பெட்ரோல் பாட்டில் கடையின் ஷட்டர் மீது விழுந்து தீப்பிடித்தது. அந்த நபரை மடக்கிப் பிடித்து, அடித்து உதைத்தனர்.  பின்னர், வளசரவாக்கம் போலீசார், சம்பவ இடத்துக்கு விரைந்து போதை ஆசாமியை பிடித்து காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரித்தனர். விசாரணையில் அவர் சின்னப்போரூரைசேர்ந்த கதிரவன்(32.போரூரில் உள்ள தனியார் கம்பெனியில் வேலை செய்து வந்ததும் தெரியவந்தது. போலீசார் அவரை கைது செய்தனர். மேலும் பைக்கை பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனர்.

Related Stories: