ஆஸ்திரேலிய நாடாளுமன்றத்தில் காதலை வெளிப்படுத்திய எம்.பி: நாதன் லேம்பர்ட் காதலை ஏற்றுக் கொண்ட நோவா ஏர்லிச்

கான்பரா: ஆஸ்திரேலிய நாடாளுமன்றத்தில் எம்.பி ஒருவர் சக பெண் எம்.பியிடம் காதலை வெளிப்படுத்திய சுவாரசியம் அரங்கேறியுள்ளது. விக்டோரியா மாகாணத்தை சேர்ந்த தொழிலாளர் கட்சி எம்.பி. நாதன் லேம்பர்ட் முதன் முறையாக நாடாளுமன்றத்தில் உரையாற்றினார். அப்போது யாருமே எதிர்பாராத விதமாக தனது காதலியான சக நாடாளுமன்ற உறுப்பினர் நோவா ஏர்லிச் பார்த்து திருமண செய்து கொள்ளலாமா என கேள்வி எழுப்பினார். தற்போது மோதிரம் கொண்டு வரவில்லை என்றும் இரவில் அதனை தருவதாகவும் அவர் தெரிவித்தார். இதை பார்த்து கட்சி பேதமின்றி அனைத்து உறுப்பினர்களும் கைதட்டி ஆர்ப்பரித்தனர்.

பேச்சு முடிந்த பின் நாதன் லேம்பர்ட் கொடுத்த மோதிரத்தை நோவா ஏர்லிச் ஏற்றுக்கொண்டார். நோவா ஏர்லிச் மீதான காதலை சிறந்த தருணத்தில் வெளிப்படுத்த தீர்மானித்திருந்தாகவும், கோவிட் காரணமாக அதற்கு சரியான நேரம் வாய்க்கவில்லை என்று கூறிய நாதன் லேம்பர்ட் இதை விட வேறு சிறந்த இடம் இல்லை என்று கருதி நாடாளுமன்றத்தில் அன்பை வெளிப்படுத்தியதாக தெரிவித்தார். ஏற்கனவே நாதன் லேம்பர்ட்-க்கு 2 குழந்தைகள் உள்ள நிலையில் அவரை மணமுடிக்க நோவா ஏர்லிச் சம்மதம் தெரிவித்துள்ளார்.

Related Stories: