சீனாவின் வளர்ச்சியை தடுக்க, தனிமைப்படுத்த அமெரிக்கா முயற்சி: அதிபர் ஜின்பிங் பேச்சு

பீஜிங்: சீனாவின் வளர்ச்சியை தடுக்கவும் அதனை தனிமைப்படுத்தவும் அமெரிக்கா முயற்சிப்பதாக அந்நாட்டின் அதிபர் ஜின்பிங் கூறினார். சீன நாடாளுமன்ற குழுவின் ஆண்டு கூட்டத்தில் பங்கேற்று அதிபர் ஜின்பிங் பேசியதாவது:

சீனா மீதான அமெரிக்காவின் தொழில்நுட்ப கட்டுப்பாடுகள், தைவானுக்கு அளிக்கும் ஆதரவு நடவடிக்கைகள், அமெரிக்கா சீனாவை எதிரியாக பார்ப்பதாக உள்ளது. அமெரிக்காவின் தலைமையில் சீனாவின் வளர்ச்சியைத் தடுக்க, கட்டுப்படுத்த, தனிமைப்படுத்த தீவிர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதனால் முன் எப்போதும் சந்திக்காத கடுமையான பிரச்னைகள், சவால்களை சீனா எதிர்கொள்ள நேரிட்டுள்ளது. ஆனால், மக்கள் இவற்றை எதிர்த்து துணிச்சலுடன் போராட வேண்டும். அமெரிக்காவுக்கு உலகம் மற்றும் பிராந்திய சந்தையில் போட்டியாளராக கருதும் சீனாவை அச்சுறுத்த பல்வேறு தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதன் ஒருபகுதியாகவே, இந்தோ-பசிபிக் பிராந்திய அமைப்பு, குவாட், ஆக்கஸ் போன்ற அமெரிக்காவின் தலைமையிலான கூட்டமைப்புகள் இந்த பிராந்தியங்களில் நேட்டோ அமைப்பை போன்று செயல்படுகின்றன. இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: