பீஜிங்: ``அமெரிக்காவின் இந்தோ-பசிபிக் கூட்டமைப்பு ஆசியாவின் நேட்டோவாக பயன்படுத்தப்படுகிறது’’ என்று சீன வெளியுறவு அமைச்சர் குற்றம் சாட்டியுள்ளார். சீனாவில் நடந்த ஆண்டு பத்திரிகையாளர் மாநாட்டில் பங்கேற்று பேசிய சீன வெளியுறவு அமைச்சர் கீன் கேங், ``அமெரிக்காவின் இந்தோ-பசிபிக் உத்தியானது, இப்பிராந்தியத்தில் பாதுகாப்பு ஒத்துழைப்பை அதிகரிக்க அமைக்கப்பட்ட சுதந்திரமான, வெளிப்படையான அமைப்பு அல்ல. மாறாக, ஆசிய-பசிபிக் பிராந்தியத்தில் விநியோக சங்கிலியை துண்டிக்க தனிப்பட்ட அமைப்பை உருவாக்கும் அமெரிக்காவின் ஒருங்கிணைந்த முயற்சியாகும்.