வெளிநாடுகளில் வேலை வாங்கித் தருவதாக ரூ.74 லட்சம் மோசடி பிரபல கவர்ச்சி நடிகை அல்போன்சாவின் தங்கை கைது: மத்திய குற்றப்பிரிவு போலீசார் நடவடிக்கை

சென்னை : ஆன்லைன் மூலம் விளம்பரம் செய்து துபாய், சிங்கப்பூர், மலேசியா உள்ளிட்ட நாடுகளில் வேலை வாங்கித்தருவதாக கூறி 17  பேரிடம் ரூ.74 லட்சம் மோசடி செய்ததாக பிரபல சினிமா கவர்ச்சி நடிகை அல்போன்சாவின் தங்கையை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். பிரபல சினிமா கவர்ச்சி நடிகை அல்போன்சாவின் தங்கை சோபா (46). இவர் தனது கணவர் வசந்தனுடன் கேளம்பாக்கத்தில் வசித்து வருகிறார். சோபா வளசரவாக்கத்தில் ெவளிநாடுகளில் வேலை வாங்தித் தரும் நிறுவனம் ஒன்று நடத்தி வருகிறார். இந்த நிறுவனத்தின் மூலம் சமூக வலை தளங்களில் மலேசியா, சிங்கப்பூர், துபாய், கனடா உள்ளிட்ட நாடுகளில் பொறியாளர் உட்பட பணிகளுக்கு ஆட்கள் தேவை என்று விளம்பரம் செய்துள்ளார்.

அந்த விளம்பரத்தை பார்த்த பட்டதாரி வாலிபர்கள் பலர் வளசரவாக்கத்தில் உள்ள அலுவலகத்ைத அணுகியுள்ளனர். அப்போது கவர்ச்சி நடிகையின் தங்கை சோபா, நேர்முகத் தேர்வு நடத்தி 17 பேரை  தேர்வு செய்ததாகவும் அவர்களிடம் இருந்து ரூ.74 லட்சம் வரை பணம் ெபற்றுள்ளார். ஆனால் பணம் கொடுத்த யாருக்கும் பணிக்கான விசா பெற்றுத் தரவில்லை என்று கூறப்படுகிறது. இதுகுறித்து சோபாவிடம் நேரில் சென்று பணம் கொடுத்த பட்டதாரிகள் கேட்டுள்ளனர். ஆனால் அவர் முறையாக பதில் அளிக்காமல் ஏமாற்றி வந்துள்ளார்.

இதையடுத்து பாதிக்கப்பட்ட 17 பேர் வெளிநாட்டு நிறுவனங்கள் வழங்கியதாக சோபா வழங்கிய பணிநியமன ஆணையை வைத்து விசாரித்த போது, அது போலியானது என தெரியவந்தது. அதைத் தொடர்ந்து 17 பேரும் சென்னை கமிஷனர் அலுவலகத்தில் சில நாட்களுக்கு முன்பு புகார் அளித்துள்ளனர். அந்த புகாரின் அடிப்படையில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தினர். அதில் சோபா அங்கீரிக்கப்படாத வேலைவாய்ப்பு நிறுவனம் நடத்தி 17 பேரிடம் ரூ.74 லட்சம் பணம் பெற்று மோசடி செய்தது தெரியவந்தது. அதைத் தொடர்ந்து மத்திய குற்றப்பிரிவு போலீசார் நேற்று கேளம்பாக்கம் சென்று சோபாவை கைது ெசய்தனர். ேமலும் வளசரவாக்கத்தில் உள்ள அவரது அலுவலகத்தில் சோதனை செய்து வெளிநாடுகளுக்கு ஆட்களை அனுப்புவதற்கான போலி ஆவணங்களை பறிமுதல் செய்தனர்.

Related Stories: