மும்பை: இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் விராட்கோஹ்லி 15 ஆண்டுகளுக்கும் மேலாக கிரிக்கெட் உலகின் ராஜாவாக வலம் வருகிறார். இதற்கு காரணம் அவருடைய கடின உழைப்புதான். இவர் ஒரு நாள், டி20, டெஸ்ட் ஆகிய மூன்றிலும் சேர்த்து 25,000க்கும் மேற்பட்ட ரன்களை அடித்துள்ளார். இதனால்தான் ரன் மெஷின் என கோஹ்லியை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். இப்படி விராட் கோஹ்லிக்கு நிகராக பெண்கள் கிரிக்கெட்டில் பெயர் வாங்கி வருபவர் இந்திய வீராங்கனை ஸ்மிருதி மந்தனா.இந்திய பெண்கள் கிரிக்கெட் அணியின் பல்வேறு வெற்றிகளில் மிக முக்கிய பங்கு வகித்துள்ள ஸ்மிருதி மந்தனா குறைந்த ஒருநாள் போட்டிகளில் (76 போட்டிகள்) விளையாடி 3,000 ரன்கள் அடித்த உலகின் முதல் வீராங்கனை என்ற பெருமையை பெற்றுள்ளார். 112 டி20 போட்டியில் விளையாடி 2,800 ரன்கள் அடித்துள்ளார்.பெண்கள் கிரிக்கெட்டின் ரன் மெஷினாக கருதப்படும் மந்தனா பேட்டை கையில் எடுத்தால் குறைந்தது 30 ரன்கள் எடுக்காமல் பெவிலியன் திரும்ப மாட்டார்.
