அகமதாபாத்தில் தவறுகளை திருத்திக்கொள்ள முயற்சிப்போம்: ரோகித் சர்மா பேட்டி

இந்தூர்: ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இந்தூரில் நடந்த 3வது டெஸ்ட்டில் அடைந்த தோல்வி குறித்து இந்திய அணி கேப்டன் ரோகித்சர்மா கூறியதாவது: ஒவ்வொரு முறையும் நாங்கள் சொந்த மண்ணில் விளையாடும்போது ஆடுகளம் தொடர்பாக அதிக கவனம் செலுத்தப்படுகிறது. இது தேவை இல்லை என்றே நினைக்கிறேன். நான் ஏற்கெனவே கூறியது போன்று இந்த வகையிலான ஆடுகளங்களிலேயே நாங்கள் விளையாட விரும்புகிறோம். சொந்த மண்ணில் விளையாடும் போது எப்போதும் நமது பலத்துக்கு தகுந்தபடிதான் செயல்பட வேண்டும்.

எங்களது பலமே சுழற்பந்து வீச்சு மற்றும் நீண்ட நேரம் பேட்டிங் செய்வதுதான். நாங்கள் வெளிநாடுகளுக்கு சென்று விளையாடும் போது மற்ற அணிகள் சொந்த மண்ணின் சாதகத்தை பயன்படுத்துகின்றன. அதில் என்ன தவறு இருக்கிறது. இந்தூர் போட்டியில் நாங்கள் மோசமாக விளையாடியே விக்கெட்களை இழந்தோம். பந்து வீச்சாளர் ஒரே இடத்தில் ஆறு பந்துகளை வீச பேட்ஸ்மேன்கள் இடம் கொடுக்கக்கூடாது. வித்தியாசமாக ஏதாவது செய்ய முயற்சிக்க வேண்டும் புஜாரா, ஸ்ரேயாஸ் ஐயரிடம் இருந்து கற்றுக்கொள்ள வேண்டும். எங்கள் தவறுகளை அகமதாபாத்தில் திருத்திக்கொள்ள முயற்சிப்போம், என்றார்.

Related Stories: