லால்குடி அரசு வேளாண் பொறியியல் கல்லூரியில் மின்சாரம் பாய்ந்து 5 மாணவர்கள் காயம்

திருச்சி: திருச்சி மாவட்டம் லால்குடியில் அன்பில் தர்மலிங்கம் அரசு வேளாண் பொறியியல் கல்லூரி உள்ளது. இங்குள்ள மைதானத்தில் இன்று காலை இரும்பு கம்பம் நடும் பணியில் இதே பகுதியை சேர்ந்த தொழிலாளர்கள் மதன், செந்தமிழ்செல்வன், திவாகர் ஆகியோர் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது கம்பத்தை தூக்கி நிறுத்தும்போது மேலே சென்ற மின் ஒயரில் கம்பம் பட்டதில் மின்சாரம் பாய்ந்து தொழிலாளர்கள் தூக்கி வீசப்பட்டனர். இதைபார்த்து அதிர்ச்சி அடைந்த மைதானத்தில் நின்ற 5 மாணவர்கள் அவர்களை தூக்கியபோது அவர்கள் மீதும் மின்சாரம் பாய்ந்தது.

இதில் காயமடைந்த 5 மாணவர்கள்,தொழிலாளர்கள் 3 பேர் லால்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று திரும்பினர்.

Related Stories: