ரோகித் சர்மா மீது மஞ்ச்ரேக்கர் பாய்ச்சல்

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்ச்ரேக்கர் அளித்துள்ள பேட்டி: போட்டியில் ரிவியூ கேட்கும்போது விக்கெட் கீப்பரிடம் முதலில் ஆலோசிக்க வேண்டும். ஆஸ்திரேலிய அணியில் ரிவியூ என்றாலே உடனடியாக விக்கெட் கிப்பர் அலெக்ஸ் கேரி இடம் கேட்பார்கள். ஆனால், இந்திய அணியை பொறுத்தவரை பரத்திடம் அப்படி கேட்பதில்லை.

ரிவியூ என்று வரும்பொழுது சீனியர்-ஜூனியர் என்பதை ஓரமாக வைத்துவிட்டு, யாருடைய பொசிஷனில் இருந்து பார்த்தால் தெளிவாக இருக்கும் என்பதை தெரிந்துகொண்டு அவரிடம் கேட்டுவிட்டு ரிவியூ சொல்வதா? வேண்டாமா? என்பதை முடிவு செய்திருக்கவேண்டும். அஸ்வின், ஜடேஜா இருவரும் சிறந்தவர்கள், ஆர்வத்தில் ரிவியூ போலாம் என்றுதான் உணர்ச்சிவசப்படுவார்கள். ஆனால் கேப்டன் தான் கவனத்துடன் இருந்திருக்க வேண்டும். இனியாவது திருந்துங்கள், என சாடி உள்ளார்.

Related Stories: