அமெரிக்க ஏற்றுமதி கவுன்சிலுக்கு 2 இந்திய வம்சாவளியினர் நியமனம்

வாஷிங்டன்: அமெரிக்க ஏற்றுமதி கவுன்சிலின் உறுப்பினர்களாக இந்திய வம்சாவளியை சேர்ந்த 2 பேரை அதிபர் ஜோ பைடன் நியமித்துள்ளார்.

 சர்வதேச வர்த்தகம் தொடர்பாக அரசுக்கு ஆலோசனைகளை அளிப்பதில்  அமெரிக்க ஏற்றுமதி கவுன்சில் முக்கிய பங்கு வகிக்கிறது. இந்த கவுன்சில் உறுப்பினர்களுக்கான பதவிகளுக்கு 20க்கும் மேற்பட்டோரை  அதிபர் ஜோ பைடன் நியமித்துள்ளார். இந்திய வம்சாவளியை சேர்ந்த புனித் ரெஞ்சன் மற்றும் ராஜேஷ் சுப்பிரமணியன் ஆகியோர் ஏற்றுமதி கவுன்சில் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

இவர்களில்  புனித் ரெஞ்சன் டிலோட்டி நிறுவனத்தின் சிஇஓவாக இருந்து வருகிறார். அரியானாவில் ரோதக்கை சேர்ந்தவர். பெட்எக்ஸ் நிறுவனத்தின் தலைவர் மற்றும் சிஇஓவாக உள்ள ராஜேஷ் சுப்பிரமணியம்  கேரள மாநிலம் திருவனந்தபுரத்தை சேர்ந்தவர். அதிபர் ஜோ பைடன்  அரசின் முக்கிய பொறுப்புகளுக்கு இந்தியர்களை நியமித்துள்ளார். தற்போது அங்கு 130க்கும் மேற்பட்ட இந்தியர்கள் முக்கிய பொறுப்புகளில் இருக்கின்றனர்.

Related Stories: