திருப்பதி மாநகராட்சியில் நடைபெறும் ஜெகனண்ணா வீடு கட்டுமான பணிகளில் விழிப்புடன் இருக்க வேண்டும்

*அதிகாரிகளுக்கு ஆணையாளர் அறிவுறுத்தல்

திருப்பதி :  திருப்பதி மாநகராட்சியில் நடைபெறும் ஜெகனண்ணா வீடு கட்டுமான பணிகளில் அதிகாரிகள் தொடர்ந்து விழிப்புடன் இருக்க வேண்டும் என ஆணையாளர் அனுபமா அஞ்சலி அறிவுறுத்தியுள்ளார். திருப்பதி மாநகராட்சி சார்பில் மாநில அரசின் ஜெகனண்ணா வீடுகள் கட்டுமானப் பணிகளின் ஆய்வின் ஒரு பகுதியாக சந்திரகிரி மண்டலம் எம்.கோட்டப்பள்ளியில் கட்டப்பட்டு வரும் வீடுகளை மாநகராட்சி ஆணையாளர் அனுபமா அஞ்சலி நேற்று ஆய்வு செய்தார். அப்போது அவர் பேசுகையில், ‘ஜெகனண்ணா வீடுகளில் தொடர்ந்து மின்சாரம் வழங்க வேண்டும்.

திருப்பதி நகர் பகுதியில் உள்ள தகுதியான ஏழைகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ள ஜெகனண்ணா  மனையில் உள்ள வீடுகளை கட்டி முடிக்க வேண்டும்.  வீடு கிரகபிரவேஷத்திற்கு தயார்படுத்தவும் பொறியியல் அதிகாரிகளுக்கு திருப்பதி மாநகராட்சி ஆணையர்  உத்தரவிட்டுள்ளார்.   கட்டுமான பணிகளுக்கு தேவையான ஆழ்துளை கிணறுகள் உள்ளது. குடிநீர் வினியோகம் நேரங்களில் மின்தடை ஏற்படுவதாகவும் பொறியாளர்கள் கமிஷனரின் கவனத்திற்கு கொண்டு சென்றபோது, கமிஷனர் உடனடியாக மின்வாரிய மேற்பார்வையாளரிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.  

கட்டப்பட்டு வரும் ஜெகனண்ணா வீடுகளுக்கு மும்முனை மின்பாதை மூலம் தொடர்ந்து மின்சாரம் வழங்குவதை உறுதி செய்ய வேண்டும். பொறியியல் அலுவலர்கள், பணியாளர்கள், பாதுகாப்புச் செயலர்கள், சர்வேயர்கள் ஆகியோர் ஒருங்கிணைந்து முன்னோக்கிச் சென்று, வீடுகள் கட்டும் பணியில் வீட்டு உரிமையாளர்களை ஈடுபடுத்தி கட்டுமானப் பணிகளை முடிக்க வேண்டும் என அறிவுறுத்தினார்..

ஆய்வின்போது, நகராட்சி இன்ஜினியரிங் பணியாளர்கள் விஜய்குமார் ரெட்டி, சஞ்சீவ சர்மா, வீட்டுவசதி பி.டி.சீனிவாசராவ், வீட்டுவசதி டி.இ. மோகன்ராவ், பாதுகாப்பு செயலர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Related Stories: