ஸ்ரீவில்லிபுத்தூர் பருத்தி ஆராய்ச்சி நிலையத்தில் அரவக்குறிச்சி வட்டார விவசாயிகள் 40 பேர் கண்டுணர் சுற்றுலா-மாநில அளவிலான பயிற்சி அளிக்கப்பட்டது

அரவக்குறிச்சி : அரவக்குறிச்சி வட்டாரத்தில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை மூலம் அட்மா திட்டத்தின் கீழ் வேளாண்மை துறை சார்பாக 40க்கு மேற்பட்ட விவசாயிகளை மாநில அளவிலான பயிற்சிக்காக தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் ஸ்ரீவில்லிபுத்தூர் பருத்தி ஆராய்ச்சி நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

விவசாயிகளுக்கு தகுந்த பயிர்களை கண்டுணர்ந்து பயிரிடும் திறனை மேம்படுத்துவதற்காக, வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை மூலம் அட்மா திட்டத்தின் கீழ் பல்வேறு விவசாய பல்கலைக் கழகங்களுக்கு விவசாயிகளை அழைத்துச் சென்று பயிற்சி அளிக்கப்படுகின்றது. இதன்படி, அரவக்குறிச்சி வட்டாரத்தில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை மூலம் அட்மா திட்டத்தின்கீழ் வேளாண்மைதுறை சார்பாக 40க்கு மேற்பட்ட விவசாயிகளை மாநில அளவிலான பயிற்சிக்காக தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தின்கீழ் செயல்படும் ஸ்ரீவில்லிபுத்தூர் பருத்தி ஆராய்ச்சி நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

இந்த பயிற்சில், ஸ்ரீவில்லிபுத்தூர் பருத்தி ஆராய்ச்சி நிலைய தலைவர் மற்றும் பேராசிரியர் டாக்டர் ஸ்ரீனிவாசன், ஆராய்ச்சி நிலையம் குறித்து முன்னுரை ஆற்றினார். அதனைத்தொடர்ந்து பேராசிரியர் விஜயராகவன், பருத்திப் பயிரைத் தாக்கும் பூச்சி பற்றியும் அதனை கட்டுப்படுத்தும் முறைகள் குறித்தும் விரிவுரை அளித்தார். முக்கிய பங்காக சாறு உறிஞ்சும் பூச்சிகளை கட்டுப்படுத்த மஞ்சள் அட்டையை பயன்படுத்தும்முறை குறித்து செயல் விளக்கம் அளித்தார்.

பருத்திப் பயிரை தாக்கும் சாம்பல் நோய் வேர் அழுகல் நோய் கட்டுப்படுத்தும் முறைகளை பற்றி பேராசிரியர் விமலா விளக்க உரை மற்றும் செயல்முறை விளக்கம் அளித்தார். மரபியல் துறையை சார்ந்த பேராசிரியர் தங்கபாண்டியன், ஸ்ரீவில்லிபுத்தூர் பருத்தி ஆராய்ச்சி நிலையத்தில் வெளியிடப்பட்ட பருத்தி ரகங்கள் பற்றி முழுமையாக விளக்க உரை அளித்தார்.  மேலும் ஆராய்ச்சி நிலையத்தில் உள்ள மாதிரி வயல்வெளிகளை காண்பித்து தொழில்நுட்பம் விளக்கம் அளித்தார்.

விவசாயிகளுக்கு பருத்தி பயிரில் ஏற்பட்ட சந்தேகங்களும் நிவர்த்தி செய்யப்பட்டன. இந்த பயிற்சிக்கான ஏற்பாடுகளை வட்டார தொழில்நுட்ப மேலாளர் சோனியா மற்றும் உதவி தொழில் நுட்ப மேலாளர் பிரபாகரன், சுவாதி ஆகியோர் செய்திருந்தனர். அரவக்குறிச்சி வட்டாரத்தைச் சோந்த 40க்கு மேற்பட்ட விவசாயிகள், ஸ்ரீவில்லிபுத்தூர் பருத்தி ஆராய்ச்சி நிலையத்தில் பயிற்சியில் கலந்து கொண்டு பயனடைந்தனர்.

Related Stories: