மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையின் புதிய தலைவர் பிரசாந்த் லவானியா நியமனம்: ஒன்றிய அரசு உத்தரவு

டெல்லி: மதுரை எய்ம்ஸ் தலைவராக இருந்த நடராஜன் வெங்கட்ராமன் மறைவை அடுத்து புதிய தலைவர் நியமிக்கப்பட்டுள்ளார். மதுரை எய்ம்ஸ் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையின் புதிய தலைவராக டாக்டர் பிரசாந்த் லவானியா நியமனம் செய்துள்ளனர். உத்தரபிரதேசம் மாநிலம் ஆக்ரா சரோஜினி நாயுடு மருத்துவக்கல்லூரி அறுவை சிகிச்சை துறை பேராசிரியராக பிரசாந்த் லவானியா உள்ளார். ஏற்கனவே தலைவராக இருந்த நாகராஜன் வெங்கட்ராமன் ஜனவரி மாதம் உடல்நலக் குறைவால் காலமானார்.

மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும் என மத்திய அரசு அறிவித்து தோப்பூரில் 224 ஏக்கரில் இடம் ஒதுக்கப்பட்டு, கடந்த 2019ல் அடிக்கல் நாட்டப்பட்டது. கட்டுமான பணிக்கு நிதியை ஜப்பானை சேர்ந்த ஜைக்கா நிறுவனம் ஒதுக்கியுள்ளது. இதற்காக முதல் கட்டமாக 1,500 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்தது. கட்டுமான பணிகள் தாமதமாகிய நிலையில், இந்த நிதியை அதிகரித்து ரூ.1,977 கோடியாக அறிவித்தது. மதுரை எய்ம்ஸ் கட்டுமான பணிக்கு ஒதுக்கப்பட்ட தொகையில் இதுவரையில் ரூ.12.35 கோடி மட்டுமே விடுவிக்கப்பட்டுள்ளதாக ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது.

ஒன்றரை ஆண்டுகள் கடந்த நிலையில் தற்போது வரை மதுரை எய்ம்ஸ் கட்டுமான பணிகள் இன்னும் தொடங்கப்படவில்லை. தற்போது ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரியில் மதுரை எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரிக்கான வகுப்புகள் நடைபெற்று வருகிறது.இந்நிலையில் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு தலைவரை நியமித்து ஒன்றிய அரசு உத்தரவிட்டுள்ளது.

Related Stories: