இத்தாலியில் படகு கவிழ்ந்து 30 அகதிகள் பலி

ரோம்: இத்தாலியின் கேலாப்ரியா பிராந்தியத்தில் உள்ள குரோடோன் நகருக்கு அருகே நூற்றுக்கும் மேற்பட்ட புலம்பெயர்வோரை ஏற்றிச் சென்ற படகு நேற்று அதிகாலை கடல் சீற்றம் காரணமாக கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில், பிறந்து சில மாதங்களேயான குழந்தை உள்பட 27 அகதிகளின் சடலங்களை தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த மீட்பு படையினர் மீட்டுள்ளனர். நீண்ட நேர தேடுதலுக்கு பின்னர் 40 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். இவர்களை பற்றிய எந்த தகவலும்  தெரியவில்லை. இந்த புலம்பெயர்வோர் படகு துருக்கி அல்லது எகிப்து கடற்கரையில் இருந்து புறப்பட்டிருக்க வேண்டும் என்று இத்தாலி கடலோர காவல் படையினர் தெரிவித்தனர்.

Related Stories: