2,000 கடுங்குற்றவாளிகள் ஒரே சிறையில் அடைப்பு: எல்சால்வடார் நாட்டில் அதிரடி

டெகோலூகா: எல் சால்வடார் நாட்டில் கடுங்குற்றவாளிகளை சிறையில் அடைப்பதற்காக புதியதாக கட்டப்பட்ட சிறையில், 2,000 கடுங்குற்றவாளிகள் ஒரே நேரத்தில் அடைக்கப்பட்டனர். மத்திய அமெரிக்க நாட்டான எல் சால்வடார் நாட்டில் கடுங்குற்றவாளிகளை சிறையில் அடைப்பதற்காக புதிதாக பயங்கரவாத தடுப்பு மையம் என்ற ெமகா சிறை சமீபத்தில் டெகோலூகா என்ற இடத்தில் திறக்கப்பட்டது. இந்த சிறையில் 4,000க்கும் மேற்பட்ட கைதிகளை அடைத்து வைத்திருக்க முடியும். இந்நிலையில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் அடைக்கப்பட்டிருந்த கடுங்குற்றவாளிகள் 2,000 பேரை அந்த மெகா சிறையில் அடைக்கும் நிகழ்ச்சி நடந்தது.

அதற்காக கடுங்குகுற்றவாளிகளை வரிசையில் கைகளை கட்டிப்போட்டு நீண்ட வரிசையில் நிற்க வைக்கப்பட்டனர். இதுதொடர்பான புகைப்படங்களும் வெளியாகின. இதுகுறித்து எல் சால்வடார் நாட்டின் அதிபர் நயிப் புகேலே வெளியிட்ட அறிவிப்பில், ‘சமீபத்தில் திறக்கப்பட்ட ‘மெகா சிறைக்கு’ கடுங்குற்றவாளிகள் 2,000 பேர் மாற்றப்பட்டனர்.

இது தான் அவர்களின் புதிய வீடு; அங்கு அவர்கள் ஒரே இடத்தில் அடைபட்டு கிடப்பார்கள். இவர்கள் அனைவரும் மக்களுக்கு பெரும் துன்பங்களை கொடுத்தவர்கள் ஆவர்’ என்று ஸ்பானிஷ் மொழியில் தெரிவித்துள்ளார். தற்போது புதிய சிறைக்கு மாற்றப்பட்ட அனைவரும் போதைப்பொருள் மாஃபியா கும்பலைச் சேர்ந்தவர்கள் என்றும், உலகிலேயே மிகப்பெரிய மற்றும் 410 ஏக்கரில் கட்டப்பட்ட மிகப்பெரிய சிறைச்சாலை என்று அதிகாரிகள் கூறினர்.

Related Stories: