பெரம்பூர் நகைக்கடை கொள்ளை வழக்கு கொள்ளையன் குல்லா அணிந்து செல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியானது

சென்னை: பெரம்பூர் நகைக்கடை கொள்ளை வழக்கில்,  குல்லா அணிந்து கடைக்குள் செல்லும் நபரின் சிசிடிவி காட்சிகள் வெளியானது. சென்னை பெரம்பூர் பேப்பர் மில்ஸ் சாலையில் உள்ள ஜேஎல் கோல்ட் பேலஸ் என்ற நகைக்கடையில் கடந்த 9ம் தேதி இரவு மர்ம நபர்கள் நகைக்கடை ஷட்டரை வெல்டிங் மிஷினால் ஓட்டைபோட்டு ஒன்பது கிலோ தங்க நகைகள் மற்றும் ₹20 லட்சம் மதிப்புள்ள வைர நகைகளை அள்ளி சென்றனர். இதுகுறித்து திருவிக நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். கொள்ளையர்களை பிடிக்க, 3 உதவி ஆணையர் தலைமையில், மொத்தம் 8 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. சம்பவம் நடந்த இடம் மட்டும் அல்லாமல் தற்போது பெரம்பூர், கொளத்தூர், திருவிக நகர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளையும் தனிப்படை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.

இந்நிலையில், கொள்ளை சம்பவம் நடந்து 14 நாட்கள் ஆன நிலையில் பெரிய அளவில் எந்தவித துப்பும் கிடைக்காமல் தடைபடை போலீசார் தவித்து வருகின்றனர். நேற்று இந்த கொள்ளை சம்பவம் தொடர்பாக இரண்டு சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது. அதில், கடந்த 10ம்தேதி வீடியற்காலை காரில் இருந்து இறங்கிய, மங்கி குல்லா அனிந்த கொள்ளையன் ஒருவன் நகை கடையை நோட்டமிட்டு, அருகில் தாவி குதித்து கொள்ளையடிக்க உள்ளே செல்வதும், மற்றொரு சிசிடிவியில் ஆந்திர மாநிலம் சித்தூரை நோக்கி கொள்ளையர்கள் தப்பி செல்வதும், அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவாகி உள்ளது. எந்தவித சிறு தடயங்களும் போலீஸ்காரருக்கு கிடைத்து விடக்கூடாது என்பதில் கொள்ளையர்கள் மிக கவனமாக இருந்து, இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது.

Related Stories: