வாரத்தில் 4 நாள் வேலை இங்கிலாந்தில் வரவேற்பு

லண்டன்: இங்கிலாந்தில் வாரத்துக்கு 4 நாட்கள் வேலை திட்டம் சோதனை முயற்சியாக அமல்படுத்தப்பட்டது. இத்திட்டத்துக்கு 100 நிறுவனங்கள் ஒப்புதல் அளித்தன. இந்த திட்டத்தால் சம்பளம், சலுகைகள் எதுவும் குறைக்கப்பட மாட்டாது என்று தெரிவிக்கப்பட்டது. கடந்த ஆண்டு ஜூன் மாதம் தொடங்கப்பட்ட சோதனை முயற்சியில் சுமார் 2,900 பணியாளர்கள் பங்கேற்றனர். அவர்கள் சராசரியாக 4 நாட்களில் 34 மணி நேரம் வேலை பார்த்தனர். இந்த நிலையில் இங்கிலாந்தில் வாரத்தில் 4 நாட்கள் வேலை பார்க்கும் திட்டத்தை பெரும்பாலான நிறுவனங்களின் உரிமையாளர்கள் ஏற்று கொண்டுள்ளனர். சோதனை முயற்சியில் ஈடுபட்ட நிறுவனங்களில் பணியாற்றும் 92 சதவீதம் பேர் அத்திட்டத்தை தொடர விருப்பம் தெரிவித்துள்ளனர்.

Related Stories: