லண்டன்: பிபிசி செய்தி நிறுவனத்தின் பத்திரிகை சுதந்திரத்துக்கு ஆதரவு அளிப்பதாக இங்கிலாந்து அரசு பகிரங்கமாக அறிவித்துள்ளது. பிரதமர் மோடி குறித்த பிபிசி ஆவணப்படத்துக்கு மோடி தலைமையிலான பாஜ அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்து, அதனை ஒளிபரப்ப தடை விதித்தது. இதை தொடர்ந்து பிபிசி செய்தி நிறுவனத்தின் டெல்லி, மும்பை அலுவலகங்களில் 3 நாட்கள் வருமான வரித்துறை சோதனை நடத்தியது. இது பிரதமர் மோடி அரசின் பழிவாங்கும் நடவடிக்கை என்று காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்தன. இந்நிலையில், இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் இந்திய ஐடி துறையின் ஆய்வு குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு வெளிநாடு, காமன்வெல்த் மற்றும் மேம்பாட்டு அலுவலகத்துக்கான நாடாளுமன்ற செயலாளர் டேவிட் ரூட்லி பதிலளித்து பேசினார்.
