ஜப்பானில் ஏவுகணைகள் விழுந்ததால் பரபரப்பு: ஐநா பாதுகாப்பு கவுன்சிலைக் கூட்ட ஜப்பான் வலியுறுத்தல்

ஜப்பான்: வடகொரியா அடுத்தடுத்து நடத்தியுள்ள ஏவுகணை சோதனைகளால் கொரிய தீபகற்பத்தில் போர்ப்பதற்றம் சூழ்துள்ள நிலையில் ஐநா பாதுகாப்பு கூட்டத்தை விரைவாக கூட்ட வேண்டும் என ஜப்பான் வலியுறுத்தியுள்ளது. வடகொரியா நடத்திவரும் தொடர் அணு ஆயுத பரிசோதனைகள் தென்கொரியா, ஜப்பான் உள்ளிட்ட அண்டை நாடுகளுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. இதற்கு பதிலடியாக கொரிய தீபகற்பம் பகுதியில் அமெரிக்க படையுடன் ஜப்பான் மற்றும் தென்கொரிய ராணுவங்கள் போர் பயிற்சியை நடத்தி வருகின்றன. இதனால் ஆத்திரமடைந்துள்ள வடகொரியா ஏவுகணை சோதனையை தீவிரப்படுத்தி வருகிறது.

நேற்று குறுகிய தொலைவு செல்ல கூடிய 2 ஏவுகணைகளை ஜப்பான் அருகே கிழக்கு கடல் பகுதியை நோக்கி செலுத்தி வடகொரியா சோதனை செய்துள்ளது. இது தொடர்பான படங்கள் வடகொரியாவின் அதிகாரபூர்வ ஊடகங்களில் வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள ஜப்பான் பிரதமர் ஐக்கியநாடுகளின் பாதுகாப்பு குழு கூட்டத்தை உடனடியாக கூட்ட வேண்டும் என்று வலியுறுத்தி இருக்கிறார். அண்டை நாடுகளை அச்சுறுத்தும் விதமாக இந்த ஆண்டில் வடகொரியா மேற்கொண்ட மூன்றாவது ஏவுகணை சோதனை இதுவாகும்.

இந்நிலையில் வடகொரியாவுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக அமெரிக்காவின் படைகளுடன் இணைந்து ஜப்பான் ராணுவத்தினர் கூட்டு போர் ஒத்திகையில் ஈடுபட்டுள்ளனர். ஜப்பானின் வான் பாதுகாப்பு மணடலத்திற்கு உட்பட்ட பகுதியில் பி1, பி வகை குண்டு வீசும் விமானமும் F16 ரக போர் விமானங்களும் பறந்து சென்றன. அவற்றுடன் அமெரிக்காவின் F15 ராணுவ விமானங்கள் பாதுகாப்பாக பறந்து  சென்றன. வடகொரியாவின் ஏவுகணை சோதனைகளும் அதை அடுத்து நடைபெற்றுவரும் அமெரிக்கா, ஜப்பான், தென்கொரியா படைகளின் போர் பயிற்சியாலும் கொரிய தீபகற்பத்தில் பதற்றம் அதிகரித்துள்ளது.  

Related Stories: