விழுந்து, விழுந்து வேலை செய்தால் செய்தி ஆவதில்லை... விழுந்தால்... பெரிய செய்தி ஆகிறது: புதுச்சேரி ஆளுநர் தமிழிசை ‘கலகல’ பேச்சு

பழநி: ‘விழுந்து விழுந்து வேலை செய்தால் செய்தி ஆவதில்லை. ஆனால் விழுந்தால் பெரிய செய்தி ஆகிறது’ என புதுச்சேரி ஆளுநர் தமிழிசை சவுந்திரராஜன் பழநியில் நகைச்சுவையாக பேசினார். திண்டுக்கல் மாவட்டம், பழநியில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் புதுச்சேரி மாநில ஆளுநர் தமிழிசை சவுந்திரராஜன் நேற்று பங்கேற்றார். அங்கு அவர் பேசுகையில், ‘‘இன்று 5 ஆயிரம் குழந்தைகள் பங்கேற்ற ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்டபோது கால் தவறி கீழே விழுந்தேன். கீழே விழுவது என்பது இயல்பான ஒன்று. ஆனால் அதை பெரிய செய்தியாக பரவியதால், என்னிடம் பலரும் நலம் விசாரிக்கிறார்கள்‌. நான் விழுந்து விழுந்து வேலை செய்தாலும் செய்தியாகாது. ஆனால் கீழே விழுந்தால் அது பெரிய செய்தியாகி விடுகிறது’’ என்றார்.

மாமல்லபுரம் அருகே நேற்று 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் உருவாக்கிய 150 செயற்கைகோள்கள் விண்ணில் ஏவப்பட்டன. ராக்கெட் விண்ணில் செலுத்தும் இந்த நிகழ்ச்சியில்  பங்கேற்க இசிஆர் சாலையில் இருந்து டிடிடிசி ஓசோன் வியூவில்  அமைக்கப்பட்டிருந்த மேடைக்கு வர பச்சை கம்பளத்தில் ஆளுநர் தமிழிசை  சவுந்தரராஜன் நடந்து வந்து கொண்டிருந்தார். அப்போது, திடீரென கால் தடுமாறி  விழுந்தார். இதனால், சில நிமிடங்கள் பரபரப்பாக காணப்பட்டது. இதயடுத்து,  பாதுகாப்பு பணியில் இந்த போலீசார் ஆளுநரை தூக்கி தண்ணீர் கொடுத்தனர். பின்னர், சில நொடிகளில் ஆளுநர் தமிழிசை சவுந்தரராாஜன் சகஜ நிலைக்கு  திரும்பினார். மேலும், மேடையில் பேசும் போது, கண்களில் இருந்து கண்ணீர்  சொட்ட பேசியதையும் காண முடிந்தது. தான் கீழே விழுந்தது பரபரப்பானதை தான் பழநி நிகழ்ச்சியில் தமிழிசை குறிப்பிட்டு பேசினார்.

Related Stories: