வேங்கைவயல் விவகாரம்: குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய மேலும் ஒரு மாதம் அவகாசம் கோரி சிபிசிஐடி மனு

புதுக்கோட்டை: வேங்கைவயல் விவகாரத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய மேலும் ஒரு மாதம் அவகாசம் கோரி சிபிசிஐடி மனு தாக்கல் செய்துள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் கிராமத்தில் ஆதிதிராவிடர் மக்கள் பயன்படுத்தக்கூடிய மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் மனிதக் கழிவு கலந்த விவகாரம் கடந்த 2022ம் ஆண்டு டிசம்பர் 26ம் தேதி கண்டறியப்பட்டது. இது தொடர்பாக சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். குடிநீரில் மனிதக்கழிவு கலக்கப்பட்ட சம்பவத்தில் 512 நாட்களாகியும் இதுவரை நீதிமன்றத்தில் சிபிசிஐடி போலீசார் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யவில்லை.

வேங்கைவயல் விவகாரத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய மேலும் ஒரு மாதம் அவகாசம் கோரி சிபிசிஐடி மனு தாக்கல் செய்துள்ளது. வேங்கைவயல் கிராம குடிநீர் தொட்டியில் மனிதக் கழிவு கலக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக சிபிசிஐடி விசாரணை செய்து வரும் நிலையில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய மேலும் ஒரு மாதம் அவகாசம் கோரி 10வது முறையாக சிபிசிஐடி மனு தாக்கல் செய்துள்ளது.

The post வேங்கைவயல் விவகாரம்: குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய மேலும் ஒரு மாதம் அவகாசம் கோரி சிபிசிஐடி மனு appeared first on Dinakaran.

Related Stories: