பாஜவுக்கு முழுக்கு போடுகிறார் மாஜி மத்திய அமைச்சர் புரந்தேஸ்வரி: மீண்டும் தெ.தேச கட்சியில் ஐக்கியம்?

திருமலை: ஆந்திராவில் அரசின் திட்டங்களுக்கு என்.டி.ஆர் மற்றும் ஒய்.எஸ்.ஆர் பெயர் மட்டுமே வைக்கிறார்கள் என நேற்றுமுன்தினம் பாஜக மூத்த தலைவரும் ராஜ்யசபா உறுப்பினருமான ஜி.வி.எல். நரசிம்மராவ் கருத்து தெரிவித்திருந்தார். இதற்கு சமூக வலைதளம் மூலம் முன்னாள் மத்திய அமைச்சரும், என்.டி.ராமாராவ் மகளும், தற்போதைய பாஜக தலைவருமான புரந்தேஸ்வரி பதிலளித்துள்ளார்.

அதில் அவர் கூறியிருப்பதாவது : ₹2 ரூபாய் அரிசி, வீடு, ஜனதா வஸ்திரம், மகளிருக்கான பல்கலைக்கழகம் என தெலுங்கு மக்களுக்கான அங்கீகாரம், ஏழை மக்களுக்கான உண்மையான திட்டங்கள் கொண்டு வந்தவர் என்.டி.ஆர். மற்றொருவர் (ஒய்எஸ்ஆர்) கல்வி உதவித்தொகை, 108 ஆம்புலன்ஸ், ஆரோக்கிய  போன்ற மக்கள் நலத்திட்டங்களை கொண்டு வந்தவர். எப்படி பார்த்தாலும் ஒய்.எஸ். ராஜசேகர், என்.டி.ஆர் உண்மையான மக்கள் நலத்திட்டம் கொண்டு வந்தவர்கள் என பாராட்டினார். சொந்த கட்சியை சேர்ந்தவருக்கு புரந்தேஸ்வரி  பகிரங்கமாக பதிலடி கொடுத்தது பாஜகவினர் இடையே சலசலசப்பை ஏற்படுத்தியுள்ளது. இதன்பின்னணி குறித்து பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளது.

அடுத்த ஆண்டு நடைபெறும் நாடாளுமன்ற தேர்தலுடன், ஆந்திர சட்டமன்ற தேர்தலும் நடக்கிறது. இந்த தேர்தலில் ெதலுங்குதேச கட்சியை தனிமைப்படுத்தி நடிகர் பவன்கல்யாண் தலைமையிலான ஜனசேனா கட்சியுடன் பாஜக கூட்டணி வைத்து 3வது அணியை ஏற்படுத்த திட்டமிட்டுள்ளது. இதன்மூலம் ஓட்டுகளை பிரித்து தெலுங்கு தேச கட்சியை ஒட்டுமொத்தமாக வலுவிழக்கச்செய்து எதிர்க்கட்சி வரிசையில் பாஜக அமர திட்டமிட்டுள்ளது.

இதை அறிந்துகொண்ட என்டிஆரின் மகள் புரந்தேஸ்வரி, தனது தந்தை தோற்றுவித்த கட்சியை பாஜக நிர்மூலமாக்க திட்டமிட்டிருப்பதை ஏற்கவில்லை என்றும், தனது சொந்த அக்காவின் கணவரான சந்திரபாபுவுடன் கருத்துவேறுபாடு இருந்தாலும், தனது தந்தை உருவாக்கிய கட்சியை காப்பாற்ற, தாய் கட்சியில் மீண்டும் இணைந்து விடலாம் என்றும் எனவே பாஜகவுக்கு விரைவில் முழுக்கு போடலாம் என்றும் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

Related Stories: