இட்லி சாப்பிட்டும் இளநீர் வெட்டியும் தேமுதிக பிரசாரம்

ஈரோடு: ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் தேமுதிக சார்பில் ஆனந்த் போட்டியிருகிறார். அவரை ஆதரித்து, அக்கட்சியின் துணை செயலாளர் எல்.கே.சுதீஷ், ஈரோடு அரசு தலைமை மருத்துவமனை முன் நேற்று காலை சாலையோரம் இட்லி வியாபாரம் செய்த மூதாட்டி அருகில் அமர்ந்து இட்லி வாங்கி சாப்பிட்டு வாக்கு சேகரித்தார். நோயாளிகளை பார்க்க வந்த உறவினர்களுக்கும் உணவு வாங்கி கொடுத்தார். தொடர்ந்து இளநீர் வியாபாரியிடம் சென்று அவரது வாடிக்கையாளர்களுக்கு எல்.கே.சுதீஷ் இளநீர் வெட்டி கொடுத்து ஓட்டு கேட்டார்.

Related Stories: