கோடியக்கரை அருகே சுற்றிவளைப்பு நடுக்கடலில் நாகை மீனவர்கள் மீது இரும்பு பைப்பால் கொடூர தாக்குதல்: இலங்கை கடற்கொள்ளையர்கள் அட்டூழியம்

நாகப்பட்டினம்: நாகப்பட்டினம் மாவட்டம் நம்பியார் நகர் மீனவகிராமத்தை சேர்ந்தவர் முருகன் (45). இவரது தனது பைபர் படகில் 5பேருடன் கடந்த 14ம்தேதி இரவு நம்பியார்நகரில் இருந்து மீன்பிடிக்க சென்றார். நேற்றுமுன்தினம் நள்ளிரவு கோடியக்கரைக்கு தென்கிழக்கே இந்திய எல்லையில் மீன்பிடித்து கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக 4 படகுகளில் வந்த இலங்கை கடற்கொள்ளையர்கள் 12 பேர், இவர்களின் பைபர் படகை சுற்றி வளைத்தனர்.

இதில் 9 பேர் வைத்திருந்த இரும்பு பைப், தடி, கத்தி போன்ற ஆயுதங்களுடன் படகில் ஏறி மீனவர்களை சரமாரியாக தாக்கினர். இந்த கொலைவெறி தாக்குதலில் முருகனின் இடது கையில் 3 விரல்களில் படுகாயம் ஏற்பட்டது. மற்ற 5 மீனவர்களும் தாக்கப்பட்டு படுகாயமடைந்தனர். மேலும் ரூ.5லட்சம் மதிப்பிலான மீன்கள், ஜிபிஎஸ் கருவி, செல்போன்கள், தூண்டில் வலைகள் உள்ளிட்ட பொருட்களை கொள்ளையடித்துக் கொண்டு படகில் தப்பி சென்றனர்.

அந்த வழியாக வந்த மற்ற மீனவர்களின் உதவியோடு காயமடைந்த 6 மீனவர்களும் புஷ்பவனம் கடற்கரைக்கு வந்து சேர்ந்தனர். 6 பேரும் நாகப்பட்டினம் அரசு தலைமை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். படகு உரிமையாளர் முருகன் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.

Related Stories: