மெரினா பகுதியில் கஞ்சா பதுக்கி வைத்து விற்பனை செய்த பெண் உட்பட 2 பேர் கைது: 4 கிலோ கஞ்சா பறிமுதல்

சென்னை: மெரினா பகுதியில் சட்ட விரோதமாக கஞ்சா பதுக்கி வைத்து விற்பனை செய்த பெண் உட்பட 2 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். சென்னை பெருநகரில் “போதை தடுப்புக்கான நடவடிக்கை மூலம் கஞ்சா மற்றும் போதை பொருட்கள் கடத்தி வருபவர்களையும், விற்பனை செய்பவர்களையும் கண்டறிந்து கைது செய்ய சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சங்கர் ஜிவால், உத்தரவிட்டதின்பேரில், காவல் ஆய்வாளர்கள் தலைமையிலான காவல் குழுவினர் தீவிரமாக கண்காணித்து, கஞ்சா மற்றும் போதை பொருட்கள் விற்பனை செய்பவர்களை கைது செய்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

இதன் தொடர்ச்சியாக, D-5 மெரினா காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினருக்கு கிடைத்த ரகசிய தகவலின்பேரில், இன்று (16.02.2023) காலை காவல் குழுவினர் மெரினா, நீலம்பாஷா தர்கா அருகில் கண்காணித்த போது, அங்கு ஒரு பெண் உட்பட இருவர் ஆட்டோவில் வைத்து ரகசியமாக கஞ்சா விற்பனை செய்து கொண்டிருந்தது தெரியவந்தது. அதன்பேரில் மேற்படி ஆட்டோவில் வைத்து சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்து கொண்டிருந்த 1.தேன்மொழி, வ/41, க/பெ.கோபி, எண்.281, ராஜாஜி சாலை, அண்ணை சத்தியா நகர், சென்னை 2.பாண்டியன், வ/34, த/பெ.குப்பன், எண்.38, ஒக்கியம் துரைப்பாக்கம், கண்ணகி நகர், சென்னை ஆகிய இருவரை கைது செய்தனர்.

அவர்களிடமிருந்து 4 கிலோ கஞ்சா, ரொக்கம் ரூ.40,050/- மற்றும் 1 ஆட்டோ பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் விசாரணையில் கைது செய்யப்பட்ட தேன்மொழி மீது ஏற்கனவே கஞ்சா வழக்கு உள்ளது விசாரணையில் தெரியவந்தது. விசாரணைக்குப்பின்னர் கைது செய்யப்பட்ட மேற்படி இருவரும் (16.02.2023) நீதிமன்றத்தில் ஆஜர்செய்யப்பட உள்ளனர்.

Related Stories: