பிரேசிலில் நாளை தொடங்குகிறது உலகப்புகழ் பெற்ற கார்னிவல்: 90,000 பேர் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்ப்பு

ப்ரசிலியா: பிரேசிலில் ரியோடி ஜெனீரோவில் நடைபெற உள்ள உலகப்புகழ் பெற்ற கார்னிவல் நிகழ்வுக்கான கடைசி கட்டப்பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. திருவிழா நடைபெறும் சம்பா அரங்கை தயார் செய்யும் பணியில் தொழிலாளர்கள் தீவிரமாக ஈடுப்பட்டு வருகின்றனர். நாளை முதல் வரும் 25-ம் தேதி வரை ரியோடி ஜெனீரோவில் கார்னிவல் நடைபெற உள்ளது.

உலகின் பல்வேறு நாடுகளில் இருந்து சுமார் 90,000 பேர் கார்னிவலில் பங்கேற்க வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கார்னிவல் நாளை தொடங்க இருப்பதால் பல்வேறு நாடுகளை சேர்ந்த சுற்றுலா பயணிகள் ரியோடி ஜெனீரோ வந்த வண்ணம் உள்ளனர். கார்னிவலுக்கான சம்பா அரங்கு முதன்முதலாக 1984-ம் ஆண்டு பிரேசிலின் பிரபல கட்டட வடிவமைப்பாளர் ஆஸ்கார் நெய்மர் என்பவரால் வடிவமைக்கப்பட்டது.      

Related Stories: