ரஷ்ய பத்திரிகையாளருக்கு 6 ஆண்டு சிறை

மாஸ்கோ: உக்ரைன் மீது போர் தொடுத்துள்ள ரஷ்ய ராணுவம் குறித்து அவதூறு கருத்துகளை பரப்பிய குற்றச்சாட்டில் ரஷ்ய பத்திரிகையாளருக்கு 6 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. உக்ரைன்-ரஷ்யா போர் ஒருவருட காலமாக நீடித்து வருகிறது. இதில் அப்பாவி பொதுமக்கள் உயிரிழந்து வருகின்றனர். இந்த போரை உக்ரைனில் சிறப்பு ராணுவ நடவடிக்கை என ரஷ்ய நாடாளுமன்றம் தெரிவித்துள்ளது. இதனை விமர்சிக்கும் விதமாக ரஷ்யநியூஸ் இணையதளத்தில் மரியா பொனமரென்கோ செய்தி வௌியிட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து, தெற்கு சைபீரியாவில் உள்ள பர்னோல் நகர நீதிமன்றம், ரஷ்ய ராணுவம் குறித்து தவறான கருத்துகளை பரப்பியதாக குற்றச்சாட்டில் மரிய பொனமரென்கோவுக்கு 6 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டது.

Related Stories: