ஜப்பானின் வெந்நீர் ஊற்றில் குளிக்கும் போது 10,000 பெண்களை ஆபாச படம் எடுத்த கும்பல் சிக்கியது: டாக்டர் உட்பட 17 பேர் கைது

டோக்கியோ: ஜப்பானில் உள்ள வெந்நீர் ஊற்றில் குளிக்கும் பெண்களை ரகசியமாக புகைப்படம் எடுத்து விற்பனை செய்த கும்பலை போலீசார் கைது செய்துள்ளனர். இவர்களில் டாக்டர் உட்பட 17 பேர் அடங்குவர். ஜப்பானின் முக்கிய நகரங்களில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் வகையில் வெப்ப நீரூற்றுகள் அமைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு ஆண்டும் லட்சக்கணக்கான மக்கள் ெவப்ப நீருற்றிற்கு சென்று ஜாலியாக இருந்து வருவர். கடந்த 2 ஆண்டாக கொரோனா ஊரடங்கு காரணமாக வெப்ப நீருற்று மையங்கள் மூடப்பட்டன.

தற்போது கொரோனா கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதால் மீண்டும் அவை செயல்படத் தொடங்கி உள்ளன. இந்நிலையில் வெந்நீர் ஊற்றுகளில் குளிக்கும் பெண்களை ரகசியமான கேமராவை பயன்படுத்தி புகைப்படங்களையும், வீடியோக்களையும் சிலர் எடுத்து விற்பனை செய்து வருவதாக ஷிசுவோகா மாகாண போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதையடுத்து பெண்கள் குளிக்கும் படங்களை எடுத்த விவகாரத்தில் 17 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். இதுகுறித்து  ‘அசாஹி ஷிம்பன்’ என்ற செய்தி நிறுவனம் வெளியிட்ட செய்தியில், ‘நாடு முழுவதும் உள்ள 100க்கும் மேற்பட்ட வெந்நீர் ஊற்றுகளில் குளித்த பெண்களில் 10,000 பேரின் ஆபாசமான புகைப்படங்கள், வீடியோவை எடுத்து சிலர் விற்றுள்ளனர்.

இவ்விவகாரம் தொடர்பாக மருத்துவர், வெந்நீர் ஊற்று நிர்வாகிகள் உட்பட 17 பேரை கைது செய்துள்ளோம். இவர்களில் கரின் சைட்டோ (50) என்பவர் தனது 20 வயதிலிருந்தே வெந்நீர் ஊற்றுகளுக்கு வரும் பெண்களை புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்துள்ளார். கைது செய்யப்பட்ட மற்ற ஆண்கள், கரின் சைட்டோவிடமிருந்து பெண்களைப் படம்பிடிக்கும் தொழில் நுட்பங்களைக் கற்றுக்கொண்டதது தெரியவந்தது’ என்று கூறப்பட்டுள்ளது.

Related Stories: