நியூசிலாந்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: மக்கள் பீதி

வெலிங்டன்: நியூசிலாந்தில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. நியூசிலாந்து நாட்டின் லோயர் ஹட் பகுதியில் இருந்து 78 கி.மீ தொலைவில் 6.1 ரிக்டர் அளவில் நில நடுக்கம் பதிவாகியுள்ளது. உள்ளூர் நேரப்படி இரவு 7.30 மணியளவில் இந்த நில நடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கேப்ரியல் புயலால் வெள்ளம் ஏற்பட்டு கடும் சேதத்தை சந்தித்த நிலையில் நியூசிலாந்தில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

Related Stories: