இந்தியாவுக்கே நல்ல மாற்றம் வரும்: மமக எம்எல்ஏ உறுதி

கோபி சாமிநாதபுரத்தில் மணப்பாறை எம்எல்ஏவும், மனித நேய மக்கள் கட்சி மாநில பொதுச் செயலாளருமான அப்துல்சமது அளித்த பேட்டியில், அதிகப்படியான வாக்கு வித்தியாசத்தில் இளங்கோவன் வெற்றி பெறுவது உறுதி. அதே போன்று, வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்நாடு, புதுச்சேரி உள்ளிட்ட 40 தொகுதிகளில் 40க்கு 40 என்கின்ற வெற்றியை நிச்சயமாக மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி பெறும். இக்கூட்டணி இந்தியாவிற்கே ஒரு நல்ல முன்மாதிரியை உருவாக்கக் கூடியதாகவும், இந்தியா முழுமைக்குமே ஒரு நல்ல மாற்றத்திற்கான ஒரு நிலை இன்றைக்கு உருவாகியிருப்பதை கண்கூடாக பார்க்க முடிகிறது என்று தெரிவித்தார்.

Related Stories: