வேம்புலி அம்மன் கோயிலில் 108 பால்குடம் ஊர்வலம்

திருவள்ளூர்: திருவள்ளூரில் உள்ள கிராம தேவதையான வேம்புலி அம்மன் கோயிலில் 108 பால்குட அபிஷேகம் நடைபெற்றது. இதையொட்டி தீர்த்தீஸ்வரர் ஆலயத்தில் இருந்து 108 பால் குடங்களுடன் புறப்பட்ட ஊர்வலம் மாட வீதி, பஜார் வீதி, வடக்கு ராஜ வீதி, தேரடி மற்றும் காக்களூர் சாலை வழியாக வேம்புலி அம்மன் கோயிலை சென்றடைந்தது. இந்த பால்குட ஊர்வலத்தில் ஏராளமான பெண்கள், நகர முக்கியஸ்தர்கள், விழா ஏற்பாட்டாளர்கள் கலந்து கொண்டனர்.

 

இதையடுத்து காலை 9 மணிக்கு வேம்புலி அம்மனுக்கு 108 பால்குட அபிஷேகமும் காலை 9.30 மணிக்கு அம்மனுக்கு புஷ்ப அலங்காரமும் காலை 10.30 மணிக்கு தீபாராதனையும் நடைபெற்றது. இதன்பின்னர் ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. விழாவிற்கான ஏற்பாடுகளை விழா குழுவினர், வேம்புலி அம்மன் சேவா சங்கத்தினர், ஊர்மக்கள் சிறப்பாக செய்திருந்தனர்.

Related Stories: