தொடரில் ஜடேஜா அதிக விக்கெட் எடுப்பார்: ரிக்கி பாண்டிங் கணிப்பு

சிட்னி: ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கிபாண்டிங் அளித்துள்ள பேட்டி: இந்தியா-ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடரில், ஜடேஜா உடல் தகுதியுடன் 4 போட்டியிலும் ஆடினால் தொடரில் அதிக விக்கெட் வீழ்த்தியவர்களில் முதலிடத்தில் இருப்பார் என நினைக்கிறேன். ஜடேஜா ஆஸ்திரேலிய பேட்டர்களுக்கு ஒரு ‘‘பகல் கனவு”.

அவர் வீசும் வேகம், குறிப்பாக வலது கை வீரர்களுக்கு அவர் வீசும் லைன், எல்லா நேரத்திலும் அவர் பந்தை ஸ்டம்பில் பிட்ச் செய்கிறார். மேலும் ஒன்று திரும்பும் மற்றும் ஒன்று சறுக்கும். லபுசேன், ஸ்டீவன் ஸ்மித்தின் அவுட் அவை இரண்டும் ஒரே மாதிரியான பந்துகள். ஒன்று திரும்பியது, மற்றொன்று நேராக சென்றது. ஆஸி.யை விட இந்திய சுழற்பந்து வீச்சாளர்கள் சிறந்தவர்கள், என்றார்.

Related Stories: