வாஷிங்டன்: இந்தியாவை தனது முக்கிய கூட்டாளியாக அமெரிக்க கருதினாலும் ராணுவ தளவாடங்களுக்காக ரஷ்யாவைதான் இந்தியா நம்பியுள்ளது என்று அமெரிக்க வெளியுறவு துறை கமிட்டி தலைவர் தெரிவித்துள்ளார். அமெரிக்க நாடாளுமன்ற செனட் சபையின் வெளிவிவகார கமிட்டியின் தலைவர் ராபர்ட் மெனடென்ஸ் இந்தோ-பசிபிக் ராணுவ உத்தி தொடர்பாக பல்வேறு பரிந்துரைகள் அடங்கிய அறிக்கை தயாரித்துள்ளார். அதில், இந்தோ-பசிபிக் பிராந்திய விவகாரத்தில் ராணுவம் மற்றும் பாதுகாப்பு ரீதியாக வெற்றி பெற வேண்டுமானால் அரசு ரீதியான அணுகுமுறை தேவை. இது தொடர்பான உத்திகள் குறித்து அதிபர் ஜோ பைடன் நிர்வாகம் ஒரு ஆண்டுக்கு முன் வெளியிட்ட அறிக்கையிலும் இதே முறையை பின்பற்றுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
