எஸ்ஏ டி.20 லீக் தொடர்: கேபிட்டல்ஸ் பைனலுக்கு தகுதி

ஜோகன்னஸ்பர்க்: 6 அணிகள் பங்கேற்ற முதலாவது எஸ்ஏ டி.20 தொடர்  இறுதிகட்டத்தைநெருங்கி உள்ளது. இதில் நேற்று நடந்த முதல் அரையிறுதி போட்டியில், பிரிட்டோரியா கேபிட்டல்ஸ்-பெர்ல் ராயல்ஸ் அணிகள் மோதின.  முதலில் பேட்டிங் செய்த கேபிட்டல்ஸ் 20 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு 153 ரன் எடுத்தது. அதிகபட்சமாக ரிலீ ரோசோவ் 56 ரன் அடித்தார்.

பின்னர் களம் இறங்கிய பெர்ல் ராயல் 19 ஓவரில் 124 ரன்னுக்கு ஆல்அவுட் ஆனது. இதனால் 29 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற கேபிட்டல்ஸ்  இறுதிபோட்டிற்கு முன்னேறியது. இன்று இரவு 9.30 மணிக்கு  செஞ்சூரியனில் நடக்கும் 2வது அரையிறுதியில்  ஜோபர்க் சூப்பர் கிங்ஸ்-  சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணிகள் மோதுகின்றன.

Related Stories: